பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு 77வது வார்டுக்கு உட்பட்ட டிம்லர்ஸ் சாலையில் மழைநீர் வடிகால்வாய்க்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் அருகே மண் சரிந்து அங்கு கட்டப்பட்டிருந்த கட்டைகள் அனைத்தும் உடைந்துவிழுந்தது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் புளியந்தோப்பு போக்குவரத்து காவலர் கண்ணன் தலைமையில் போலீசார் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் போலீஸ்காரர்கள் இறங்கி பள்ளத்தில் விழுந்த தடுப்புகளை எடுத்து தள்ளி வைத்துவிட்டு வாகனங்கள் செல்வதற்கு எதுவாக ஏற்பாடு செய்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது; மழைநீர் வடிகால்வாய் பணி நடைபெறும் இடத்தில் தடுப்புகளை வைத்து மாநகராட்சி ஊழியர்கள் பணி செய்யவில்லை. தற்போது மண்சரிவால் ஏற்பட்ட பள்ளத்தால் தடுப்புகள் அனைத்தும் பள்ளத்தில் விழுந்துவிட்டது. அந்த சமயத்தில் வாகனங்கள் வந்திருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். போக்குவரத்து போலீசார் வந்து உடனடியாக சரிசெய்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இவ்வாறு கூறினர்.
The post புளியந்தோப்பில் மழைநீர் வடிகால்வாயில் மண் சரிவு: வாகனங்கள் தப்பியது appeared first on Dinakaran.