“பாஜகவுடன் அன்று திமுக கூட்டணி வைத்தபோது...” - கோவை பிரச்சாரத்தில் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி

3 hours ago 3

கோவை: “இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் எங்கு சென்று பேசினாலும், ‘மதவாத கட்சி பாஜக’ என்று கூறுகிறார். அன்று பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது ‘மதவாத கட்சி’ என்பது தெரியவில்லையா?” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தனது பிரச்சார பயணத்தை இன்று (ஜூலை 7) தொடங்கினார். மேட்டுப்பாளையம் பகுதியில் ரோடு ஷோவில் பங்கேற்ற அவர், பிரச்சார வேனில் நின்றவாறு பொதுமக்களிடையே பேசும்போது, “அதிமுக கூட்டணிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு என்பது வெள்ளத்தில் நீந்தி வந்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு உள்ளது.

Read Entire Article