டெல்லி : நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்று திமுக மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ளார். மக்களவையில் ஜல்சக்தி துறையில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக எம்.பி. பாலு, நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நதிநீர் இணைப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது என்றும் நதிநீர் இணைப்பு மூலம் கூடுதல் மின் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றும் டி.ஆர்.பாலு கூறினார்.
புல்லட் ரயில் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு, நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த ஏன் மறுக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர், “தீபகற்ப நதிகளான மகாநதியில் இருந்து கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு உள்ளிட்ட நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். ஆனால் இதுவரை நதி நீர் இணைப்பு திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. உத்தரபிரதேசம்-மத்தியபிரதேசம் இடையே இந்த திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை செயல்படுத்துவதில் பிரதமர் மோடி ஆர்வம் காட்டுகிறார். ஆனால் மற்ற இடங்களில் இந்த திட்டத்தின் நிலை என்ன?,”இவ்வாறு தெரிவித்தார்.
The post புல்லட் ரயில் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு, நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த ஏன் மறுக்கிறது : திமுக எம்.பி.டி.ஆர்.பாலு appeared first on Dinakaran.