மதுக்கரை அருகே அரசு பள்ளி ஆசிரியை எரித்துக்கொலை: கரிக்கட்டையாக சடலம் மீட்பு

4 hours ago 2

மதுக்கரை: கோவையில் அரசு பள்ளி ஆசிரியை எரித்துக்கொலை செய்யப்பட்டார். கரிக்கட்டையான சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை மதுக்கரை அருகே உள்ளது நாச்சிபாளையம். இங்கிருந்து வழுக்குப்பாறை செல்லும் சாலையில் ஓடை உள்ளது. இதன் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பெண் சடலம் கிடப்பதாக மதுக்கரை போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர் ஒத்தக்கால்மண்டபம் ஆப்பிள் கார்டனை சேர்ந்த பத்மாவதி (56) என்பவர் என்று தெரியவந்தது. சிதம்பரத்தை சேர்ந்த பத்மாவதி இங்குள்ள வழுக்குபாறை அரசு பள்ளி ஆங்கில ஆசிரியையாக இருந்ததும் தெரியவந்தது. ஆசிரியை பத்மாவதியை மர்ம நபர்கள் கடத்திகொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post மதுக்கரை அருகே அரசு பள்ளி ஆசிரியை எரித்துக்கொலை: கரிக்கட்டையாக சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article