புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் இன்று மோதல்

2 months ago 13

ஐதராபாத்,

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பெங்கால் வாரியர்ஸ் 8வது இடத்திலும், அரியானா ஸ்டீலர்ஸ் 9வது இடத்திலும், தபாங் டெல்லி 10வது இடத்திலும், குஜராத் ஜெயண்ட்ஸ் 12வது இடத்திலும் உள்ளன.

Read Entire Article