புரோ கபடி லீக் தொடரில் 5வது அணியாக ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி: கடைசி அணியாக மும்பைக்கும் வாய்ப்பு

4 weeks ago 7

புனே: 12 அணிகள் பங்கேற்றுள்ள 11வது புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் தற்போது புனேவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 123வது லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 31-28 என பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. 21வது போட்டியில் 12வது வெற்றியை பெற்ற ஜெய்ப்பூர் 5வது அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

நேற்றிரவு நடந்த மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் 48-36 என புனேரி பால்டன் அணியை வீழ்த்தியது. தெலுங்கு டைட்டன்ஸ் தனது லீக் போட்டிகள் அனைத்தையும் முடித்துவிட்டது. 66 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ள அந்த அணி 99 சதவீதம் பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. யு மும்பா 66 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ள நிலையில் நாளை அரியானா, நாளை மறுநாள் பெங்காலுடன் மோத உள்ளது.

இதில் ஒன்றில் வெற்றி அல்லது டையில் முடிந்தால் கூட 6வது அணியாக யு மும்பா தகுதி பெறும். மேலும் தெலுங்கை விட (-40), மும்பை அணியின் மொத்த ரெய்டு சராசரி புள்ளி (பிளஸ் 24) அதிகமாக இருப்பதால் 2 தோற்றாலும் கூட அந்த அணியின் புளே ஆப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதிதான். இன்று இரவு 8 மணிக்கு சம்பிரதாய மோதலாக பாட்னா-குஜராத் ஜெயன்ட்ஸ், இரவு 9 மணிக்கு தபாங் டெல்லி-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மோதுகின்றன.

பட்டியலில் முதல் இரு இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும் நிலையில் முதல் அணியாக அரியானா அந்த வாய்ப்பை பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. மற்றொரு இடத்திற்கு கடும் போட்டி உள்ளது.

The post புரோ கபடி லீக் தொடரில் 5வது அணியாக ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி: கடைசி அணியாக மும்பைக்கும் வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article