
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு பகுதிக்கு புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார், காரில் சென்றுள்ளார். அவருடன் காரில், அவருடைய உதவியாளர் பிரகாஷ் உள்ளிட்ட 5 பேர் சென்றுள்ளனர்.
அப்போது, பூச்சிக்கடை அருகே சென்றபோது, அந்த கார் திடீரென விபத்தில் சிக்கியது. இதில், காரின் முன்பகுதி சேதமடைந்தது. எனினும், இந்த விபத்தில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் உள்பட 5 பேரும் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பினர்.
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவரை கட்சி உறுப்பினர்கள் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர்.