புதுச்சேரி துணைநிலை கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

3 hours ago 1

புதுச்சேரி,

புதுச்சேரியில் கவர்னர் மாளிகை, முதல் மந்திரியின் வீடு, கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றுக்கு சமீப நாட்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை கவர்னர் மாளிகைக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

மிரட்டலை தொடர்ந்து காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு கடந்த 2 மாதங்களில் 6-வது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Read Entire Article