புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலை. மாணவி பிரச்சினையில் நீதி விசாரணைக்கு அதிமுக வலியுறுத்தல்

2 hours ago 3

புதுச்சேரி: புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “இந்திய அளவில் பெருமை சேர்க்கும் ஒன்றாக புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இயங்கி வந்தது. கடந்த சில வருடங்களாக அந்த பல்கலைக்கழகத்தில் நிர்வாக ரீதியில் நடைபெற்று வரும் கோஷ்டி பூசலால் நிர்வாகமே சீர்கெட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 11-ம் தேதி மாலை விடுதியில் தங்கி பயிலும் வெளி மாநில மாணவி ஒருவர் கல்லூரிக்கு சம்பந்தமில்லாத 4 நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இரவு இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.

Read Entire Article