புதுக்கடை, அக். 24: புதுக்கடை அருகே கிள்ளியூர் பருத்திக்காட்டுவிளையை சேர்ந்தவர் ஜெர்சன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி பெமி (36). ஊரில் புதிய வீட்டுக்கான வேலைகள் நடந்து வருகிறது. சம்பவத்தன்று புதிய வீட்டில் மின் வயர்கள், எலக்ட்ரிக் சுவிட்ச் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த மின் சாதனங்களை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். அதன் மதிப்பு ₹50 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பெமி புதுக்கடை காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் வீட்டில் உள்ள எலக்ட்ரிக் பொருட்களை திருடியது இனயம் பகுதி தோப்புவிளையை சேர்ந்த ஜெயசிங் (43) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
The post புதுக்கடை அருகே வீடு புகுந்து மின் சாதனங்கள் திருடியவர் கைது appeared first on Dinakaran.