ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் வெற்றியை முதல்வருக்கு சமர்ப்பிக்கிறேன்: சந்திரகுமார் பேட்டி

2 hours ago 2

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் வெற்றியை முதல்வருக்கு சமர்ப்பிக்கிறேன் என சந்திரகுமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அபார வெற்றி பெற்றார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 17 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இதில் 1,14,439 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அபார வெற்றி பெற்றது. பதிவான வாக்குகளில் 75% வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அபார வெற்றி பெற்றார்.

கடந்த தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்ற வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்று சந்திரகுமார் வெற்றி பெற்றார். நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். திமுகவை எதிர்த்து 45 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட்டை பறிகொடுத்தனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து திமுக வேப்டாளர் வி.சி.சந்திர குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்; ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் வெற்றியை முதல்வருக்கு சமர்ப்பிக்கிறேன். மேலும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து துணை முதல்வர் உதயநிதிக்கும், இடைத்தேர்தலில் என்னை வழிநடத்தி ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஃபார்முலா’வை உருவாக்கிய அமைச்சர் முத்துசாமி உட்பட அனைவருக்கும் நன்றி, மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி. எவ்வளவு அவதூறு கருத்துகளை பரப்பினாலும் இறுதியில் திமுகவே வென்றுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக வென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என்று கூறினார்.

The post ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் வெற்றியை முதல்வருக்கு சமர்ப்பிக்கிறேன்: சந்திரகுமார் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article