புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சந்தீப் கிஷனின் 'மசாக்கா' படக்குழு

3 months ago 12

சென்னை,

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன். தமிழில் யாருடா மகேஷ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழில் பிரபலம் அடைந்த இவர், தொடர்ந்து நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கசடதபற ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் , ராயன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது மசாக்கா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் ராவ் ரமேஷ், அன்ஷுல், ரிது வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

திரிநாத் ராவ் நக்கினா இயக்கி உள்ள இப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது அந்த தேதியில் படம் வெளியாகபோவதில்லை. அதற்கு பதிலாக புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 21-க்கு பதிலாக 'மசாக்கா'படம் வரும் 26-ம் தேதி வெளியாக உள்ளது.

Entha Opika Undamu ana Rojuki oka Yudham ..lolChallenge Accepted With the Blessings of Lord Shiva Promising you my Biggest Hit this #MahaShivarathiri 26th Feb ♥️Promising you a ChartBuster Song on 10th Feb with #BabyMa #Mazaka pic.twitter.com/PyMZU7mNPT

— Sundeep Kishan (@sundeepkishan) February 8, 2025
Read Entire Article