புதிய காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

3 days ago 2

சென்னை,

தமிழக சட்டசபையின் இன்றைய கேள்வி-பதில் நேரத்தின்போது அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன், அறந்தாங்கியில், ஆவுடையார்கோவில் வட்டத்தில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டம் கட்ட அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய கட்டிடம் கட்ட ரூ.2.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டிடம் கட்டும் பணி மே தொடங்கி முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அய்யப்பாக்கம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு முன்வருமா சட்டமன்ற உறுப்பினர் காரபாக்கம் கணபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் அய்யப்பாக்கம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டிய தேவை எழவில்லை என தெரிவித்தார்.

மேலும் சூலூர் தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்திர கட்டடம் கட்ட இடம் கண்டறியப்பட்டுள்ளது. எனவே தீயணைப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட உடன் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி எழுப்பிய கேள்விக்கு முதல்-அமைச்சர் பதில் அளித்தார்.

பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திமுக ஆட்சியமைந்த பிறகு 72 காவல் நிலையம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 23 தீயணைப்பு நிலையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. காவல் நிலையம் வேண்டும், தீயணைப்ப நிலையம் வேண்டும் என்று பல உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சாத்தியக்கூறு இருக்கும் இடங்களில் புதிய காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு நிலையங்கள் அமைக்கப்படும். காவல்துறை மானியக் கோரிக்கையில் உறுப்பினர்கள் திருப்தி அடையும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article