அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் - எச்சரிக்கும் வானிலை மையம்

2 days ago 2

சென்னை,

தமிழகத்தில் இன்று (29-03-2025) முதல் நாளை மறுநாள் ( 31-03-2025) வரை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 1, 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

29-03-2025 முதல் 31-03-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.

29-03-2025 முதல் 31-03-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2- 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையில் வரும் நாட்களில் 100 டிகிரி வெயில் சுட்டெரிக்கும். அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

Read Entire Article