கிருஷ்ணகிரி, பிப்.5: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த சரயு, அரசு பொதுத்துறை நிர்வாக இணை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, மதுரை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த தினேஷ்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார். இவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் பொறுப்புகளை, அரசு பொதுத்துறை நிர்வாக இணை செயலாளர் சரயு ஒப்படைத்தார். புதிதாக பொறுப்பேற்றுள்ள தினேஷ்குமார், 2017ம் ஆண்டு ஐஏஎஸ் முடித்து, பின் ஒன்றிய நிதி அமைச்சக உதவி செயலர், தேனி மாவட்ட துணை கலெக்டர் (பயிற்சி), சிவகாசி மாவட்ட துணை கலெக்டர், திண்டுக்கல் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), தூத்துக்குடி, மதுரை மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி உள்ளார். தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 14வது ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
The post புதிய கலெக்டர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.