புகையிலை பொருள் கடத்தியவர் கைது

1 week ago 4

திருச்சி, ஜன.29: திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் புகையிலை கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை ரோடு வெங்காயம் மண்டி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வரகனேரி பெரியார் நகரை சேர்ந்த பிரபு (43) என்பரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2 கிலோ 450 கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் ₹5,640 பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.6,875 ஆகும்.

The post புகையிலை பொருள் கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article