பீகார் தேர்தலை குறிவைத்து அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் - தி.மு.க. தாக்கு

1 week ago 3

சென்னை,

தேர்தல் நடைபெற உள்ள பீகார் போன்ற மாநிலங்களில் அரசியல் லாபத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட மத்திய பட்ஜெட் என்று தி.மு.க. விமர்சனம் செய்துள்ளது.

இதுகுறித்து தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், பட்ஜெட் சில மாநிலங்களை இலக்காக கொண்டதாக தெரிகிறது. கடந்த பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திராவுக்கு தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டன.

இந்த முறை, பீகாரில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால், அவர்கள் பீகாரை குறிவைத்து, பட்ஜெட்டிலேயே அந்த மாநிலத்திற்கான திட்டங்களை அறிவித்துள்ளார்கள். நிதிஷ் குமாரை தோற்கடிக்க பீகாரில் (தனித்தனியாக) ஆட்சிக்கு வர பா.ஜ.க. இதை செய்கிறதா என்று சந்தேகம் உள்ளது. தனிநபர் வருமான வரி விலக்குகள், சலுகைகளாக தோன்றினாலும், சேமிப்பை ஊக்குவிக்கவில்லை. மேலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.யை அதிகரிப்பதன் மூலம். சாதாரண மக்களிடமிருந்து வரிகளை "அபகரிப்பதை" மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அவர் கூறினார். 

Read Entire Article