
புதுடெல்லி,
பீகார் மாநிலம் பெகுசாரையில் இன்று (திங்கட்கிழமை) காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு சார்பில் பேரணி நடக்கிறது. 'இடம்பெயர்வை நிறுத்துங்கள், வேலைவாய்ப்பு வழங்குங்கள்' என்று பேரணிக்கு பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது 'எக்ஸ்' பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பீகார் இளம் நண்பர்களே, நான் உங்கள் பேரணியில் உங்களோடு தோளோடு, தோள் பங்கேற்க 7-ந்தேதி பெகுசாரை வருகிறேன். பீகார் இளைஞர்களின் உணர்வுகள், போராட்டம், பாதிப்பு ஆகியவற்றை உலகம் முழுவதும் உணரச்செய்ய வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம்.
நீங்களும் வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து வாருங்கள். கேள்வி கேளுங்கள். உங்கள் உரிமைகளுக்காக பீகார் அரசிடம் குரல் எழுப்புங்கள். சட்டசபை தேர்தலில் அந்த அரசை பதவியில் இருந்து அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்