பிஸ்கட் வாங்கி கொடுப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 6 ஆண்டு சிறை

14 hours ago 2

*மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அடுத்த குறும்பகேரி புதூர் பகுதியை சேர்ந்தவர் 5 வயது சிறுமி. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியதாஸ்(65) என்பவர் சிறுமிக்கு பிஸ்கட் வாங்கி கொடுப்பதாக கூறி அருகே உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். உடைகள் கிழிந்த நிலையில் வீட்டிற்கு வந்து சிறுமி நடந்ததை தாயிடம் கூறி அழுதுள்ளார்.

இதுகுறித்து அவரது தாய் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆரோக்கியதாசை கைது செய்தனர். இந்த வழக்கு நேற்று திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி மீனா குமாரி குழந்தையை கடத்திச்சென்றதற்கு 3 ஆண்டுகள், பாலியல் தொந்தரவு செய்த காரணத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

மேலும், 6 ஆண்டு தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் ஆரோக்கியதாஸை திருப்பத்தூர் டவுன் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக சரவணன் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பிஸ்கட் வாங்கி கொடுப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 6 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Read Entire Article