மானூர் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

12 hours ago 1

மானூர், மார்ச் 12: மானூர் அருகேயுள்ள கம்மாளன் குளத்தை சேர்ந்த முகமதுபருக் மகன் அகமதுமீரான் (28). இவர் நேற்று தனது வீட்டிலுள்ள ஆழ்குழாய் கிணறு மின்மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது மோட்டார் ஏர்லாக் ஆனதால் அதனை சரிசெய்ய முயன்றபோது அகமது மீரான் மீது மின்சாரம் பாய்ந்தது.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மின்மோட்டாரை நிறுத்தி அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே அகமதுமீரான் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மானூர் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article