சிவகிரி, மார்ச் 12: வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் கண்மணி, எஸ்ஐ முத்துக்குமரன் மற்றும் போலீசார் வாசுதேவநல்லூர், சிவகிரி வட்டாரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஷாஜகான் மகன் ஜாகிர் ஹூசைன் (39) என்பவர் கேரளாவில் இருந்து புகையிலைப்பொருட்களை காரில் கடத்தி வந்ததும், அவற்றை வாசுதேவநல்லூர் செண்பக கால் ஓடை தெருவை சேர்ந்த முனியசாமி (29), விஸ்வநாதபேரி காந்தி காலனி தெருவைச்சேர்ந்த ரகுபதி (46) ஆகியோரின் கடைகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து ஜாகிர்ஹூசைன், ரகுபதி, முனியசாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 350 புகையிலை பொருட்கள் பாக்கெட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், ₹10 ஆயிரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்களின் மதிப்பு சுமார் ₹60 ஆயிரம் ஆகும். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் சிவகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை மத்தய சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post காரில் புகையிலை கடத்திய மூவர் கைது appeared first on Dinakaran.