பிள்ளையார்பட்டி கோவிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம்; செல்பி எடுத்து மகிழ்ந்த பக்தர்கள்

6 months ago 15

சிவகங்கை,

புத்தாண்டையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். அதிகாலை முதல் ஏராளமான தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் வந்த வண்ணம் இருந்தனர்.

அந்த வகையில் நடிகரும், இயக்குநருமான சசிகுமார், பிள்ளையார்பட்டி கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த சசிகுமாருடன் ஏராளமான பக்தர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டு சசிகுமார் காரில் புறப்பட்டுச் சென்றார். 

Read Entire Article