பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்: டிரைவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை

2 days ago 2

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ் (வயது 32). இவர் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு அந்த பள்ளியில் பிளஸ்-2 படித்த 17 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.அதன்பின் அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று மாதேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி தகவல் தெரிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து போக்சோ வழக்குப்பதிவு செய்து மாதேசை கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் மாதேஷ் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து மாதேசுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சிவஞானம் தீர்ப்பளித்தார்.

Read Entire Article