தங்கம் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவ் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு

2 days ago 5

பெங்களூரு,

துபாயில் இருந்து 14 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கடந்த மார்ச் மாதம் நடிகை ரன்யா ராவை, பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் வைத்து டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்திருந்தனர். விசாரணைக்கு பின்பு அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்திருப்பதாக ரன்யா ராவ் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. அவரது ஜாமீன் மனுக்களை பெங்களூரு கீழ் கோர்ட்டும், ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்துள்ளது. இதற்கிடையில், தங்கம் கடத்தல் வழக்கில் ஜாமீன் கேட்டு பெங்களூரு பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நடிகை ரன்யா ராவ் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இழுத்தடித்து வருவதாகவும், அதனால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் ரன்யா ராவ் தரப்பு வக்கீல் வாதிட்டு இருந்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றுள்ளது.

இதையடுத்து, நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று(திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது. இதனால் இன்று ரன்யா ராவுக்கு ஜாமீன் கிடைக்குமா?, இல்லை சிறையிலேயே அவர் தொடர்ந்து இருக்க வேண்டுமா? என்பது தெரியவரும்.

Read Entire Article