
சென்னை,
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.47 சதவீதம் அதிகமாகும். பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை 12-ம் தேதி மாணவ -மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.dge.tn.gov.in என்ற இணைய முகவரியில் (பிறந்த தேதி, பதிவெண் விபரங்களை செலுத்தி பதிவிறக்கம் செய்யலாம்.
விடைத்தாள் நகலுக்கு வருகிற 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வு எழுதாதவர்கள் உயர் படிப்பை இந்தாண்டு தொடர்வதற்கு வசதியாக துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். துணை தேர்வு ஜூன் மாதம் 25-ம் தேதி நடக்கிறது. இதற்கான அட்டவணை நாளை 9-ம் தெதி வெளியிடப்படும். 14-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி சதவீதம் கூடியிருந்தாலும் இன்னும் அதிகரிக்க இலக்கை நோக்கி செல்கிறோம். தேர்வு எழுதாமல் ஆப்சன்ட் ஆனவர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரைகளை கூறி தேர்வு எழுத அனுப்பி வைக்க வேண்டும்.
கடந்த ஆண்டு 41 ஆயிரம் பேர் தேர்வு எழுதாமல் இருந்தனர். இந்த ஆண்டு 10 ஆயிரம்பேர் எழுதாமல் இருந்தனர். இந்த ஆண்டு 10 ஆயிரம் பேர் உள்ளனர் இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆறுதலை கொடுத்தாலும் கவலை அளிக்கிறது. 10-ம் வகுப்பு மாணவர்களின் பாட சுமையை கருத்தில் கொண்டு தமிழ் பாட சுமையை கருத்தில் கொண்டு தமிழ் பாட புத்தகத்தில் குறிப்பிட்ட சில பகுதிகள் தேவைப்படும் அளவிற்கு குறைக்கப்படும். செயற்கை நுண்ணறிவு பாடல்கள் 6-ம் வகுப்பு முதல் இந்த ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இலவச கட்டாய கல்வி சட்டம் மூலம் தனியார் பள்ளிகளில் இதுவரை மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை. மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் கேட்டு இருக்கிறோம். இதுவரையில் இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு ரூ.617 கோடி மத்திய அரசு தர வேண்டி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து படிக்கிறார்கள். மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். அதன் பதில் அடிப்படையில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள்74 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேருகிறார்கள். ஆங்கில பாடத்தில் 100க்கு நூறு பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நிஜ அளவில் நியமிக்க வேண்டும். தலைநகரமான சென்னையில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. மாவட்ட அளவில் 34-வது இடத்தில் இருக்கிறது. தேர்ச்சி விகிதம் எதனால் குறைந்தது இதற்கான காரணம் குறித்து அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும். அடுத்த கல்வியாண்டில் இடனை சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.