
சென்னை,
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கி, 25-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 18 ஆயிரத்து 344 பேரும், சிறைவாசிகள் 145 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் தமிழ் பாடத்தில் 135 பேர் 100 க்கும் 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக அரியலூர் உள்ளது. 98.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு குறித்த 21 தகவல்களை இங்கு காணலாம்:
1.தேர்ச்சி பெற்றவர்கள் 95.03 சதவீதம்.
2.தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களைவிட மாணவிகள் 3.54 சதவீதம் அதிகம்.
3.தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கை 39,352.
4.தேர்வு எழுத வராதவர்கள் 10,049.
5.கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.47 சதவீதம் அதிகம்.
6. அரசு பள்ளி தேர்ச்சி விகிதம் 91.94 சதவீதம்.
7.அரசு உதவிபெறும் பள்ளி தேர்ச்சி விகிதம் 95.71 சதவீதம்.
8.தனியார் பள்ளி தேர்ச்சி விகிதம் 98.88 சதவீதம்.
9.தமிழில் 99.15 சதவீதம் தேர்ச்சி. (இதில் 135 பேர் 100 மதிப்பெண்கள்)
10.இயற்பியலில் 99.22 சதவீதம் தேர்ச்சி (1,125 பேர் 100 மதிப்பெண்கள்) 11.வேதியியலில் 98.99 சதவீதம் தேர்ச்சி (3,181 பேர் 100 மதிப்பெண்கள்)
12.உயிரியலில் 99.15 சதவீதம் தேர்ச்சி (827 பேர் 100 மதிப்பெண்கள்
13.கணிதத்தில் 99.16 சதவீதம் தேர்ச்சி (3,022 பேர் 100 மதிப்பெண்கள்)
14.தாவரவியலில் 99.35 சதவீதம் தேர்ச்சி (269 பேர் 100 மதிப்பெண்கள்)
15.விலங்கியலில் 99.51 சதவீதம் தேர்ச்சி (36 பேர் 100 மதிப்பெண்கள்)
16.கணினி அறிவியலில் 99.73 சதவீதம் தேர்ச்சி (9,536 பேர் 100)
17.வணிகவியலில் 98.36 சதவீதம் தேர்ச்சி (1,624 பேர் 100 மதிப்பெண்கள்)
18.கணக்குப் பதிவியலில் 97.36 சதவீதம் தேர்ச்சி (1,240 பேர் 100 மதிப்பெண்கள்)
19.பொருளியலில் 98.17 சதவீதம் தேர்ச்சி (556 பேர் 100 மதிப்பெண்கள்)
20.கணினிப் பயன்பாடுகளில் 99.78 சதவீதம் பேர் தேர்ச்சி (4,208 பேர் 100 மதிப்பெண்கள்)
21.வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியலில் 98.78 சதவீதம் தேர்ச்சி (273 பேர் 100 மதிப்பெண்கள்)