"மாமன்" படத்தின் "கல்லாளியே..கல்லாளியே.." வீடியோ பாடல் வெளியானது

23 hours ago 4

சென்னை,

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, 'கருடன், கொட்டுக்காளி' , 'விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மாமன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'கருடன்' திரைப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார்.

குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள மாமன் படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான ஸ்ரீகுமரன் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. இப்படம் வருகிற மே 16-ந் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது.

இப்படம் வரும் 16ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் முழு ஆல்பமும் வெளியாகி இருக்கிறது. 'மாமன்' படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல நிறுவனமான ஜீ5 கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், 'மாமன்' படத்தின் 'கல்லாளியே..கல்லாளியே..' என்ற பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

#KallaliyeKallaliye video song from #Maaman is out now – groove to the vibes before the family entertainer hits screens. https://t.co/YnhoohuDkf#MaamanFromMay16!Directed by @p_santhA @HeshamAWmusic Magician magical words by @Lyricist_Vivek & @EgnathR Produced by… pic.twitter.com/MkCnYs0YRL

— Actor Soori (@sooriofficial) May 11, 2025
Read Entire Article