பயிற்சி: 10+2 Technical Entry Scheme- 2025 (53rd Batch). மொத்த காலியிடங்கள்: 90.
வயது வரம்பு: 16½ முதல் 19½ வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 02.01.2006க்கும் 01.01.2009க்கும் இடைப்பட்ட தேதியில் (2 தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.56,100- 1,77,500.
உடற்திறன் தகுதி: 15 நிமிடங்களுக்குள் 2.4 கி.மீ., தூரம் ஓடிக் கடக்க வேண்டும். புஷ்அப்கள்-20, சிட்அப்கள்-20, சின்அப்கள்-8 எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3.4 மீட்டர் தூரம் ஏற வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 மற்றும் JEE Main Exam 2024ல் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வானது ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு கட்டங்களாக நடைபெறும்.
ஸ்டேஜ்-1 தேர்வில் உளவியல் தேர்வு மற்றும் குழு விவாதம் நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஸ்டேஜ்-2ல் உடற்தகுதி தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு நடைபெறும்.நேர்முகத் தேர்வு உ.பி.,யில் அலகாபாத், மத்திய பிரதேசத்தில் போபால், கர்நாடகாவில் பெங்களூரு, பஞ்சாப், கபூர்தாலா ஆகிய மையங்களில் நடைபெறும்.
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 5 ஆண்டு பயிற்சி வழங்கப்படும். இதில் அடிப்படை ராணுவ பயிற்சி ஒரு வருடமும், ராணுவ தொழில்நுட்ப பயிற்சி 3 வருடமும் வழங்கப்படும். 5 வருட பயிற்சி முடிந்த பின் ராணுவத்தில் லெப்டினென்ட்டாக பணியமர்த்தப்படுவர். ஜூலை 2025ல் பயிற்சி தொடங்கும்.
விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்ததும், படிவத்தை பிரின்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும். எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம். எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வின் போது கல்வி சான்றிதழ், வயது சான்று, ஜேஇஇ மெயின் தேர்வு 2024 மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள், ஆன்லைன் விண்ணப்ப பிரின்ட் அவுட் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.11.2024.
The post பிளஸ் 2 படித்தவர்களுக்கு ராணுவ தொழிற்பிரிவில் வேலை appeared first on Dinakaran.