தூத்துக்குடி, ஜன. 29: தூத்துக்குடி பிரையண்ட் நகர் பிரதான சாலைகள் விரிவாக்க பணிகளை மேயர் ஜெகன்பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பிரதான சாலைகளை அகலப்படுத்தியும், சாலையோரங்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய சாலைகளில் எண்டுஎண்டு என்ற வகையில் சாலை அமைக்கப்படுகிறது. புதிதாக வடிகால்கள், பூங்காக்கள், பாதாள சாக்கடை பணிகளும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பிரையண்ட் நகர் பிரதான சாலை, பாளை ரோடு சந்திப்பு முதல் கட்டப்பொம்மன் நகர் வரையில் சாலை விரிவாக்கம் மற்றும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையில்தான் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த சாலை விரிவாக்க பணியை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். வட்ட செயலாளர் ரவீந்திரன், மேற்கு மண்டல இளநிலை பொறியாளர் துர்கா தேவி, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி ஜேஸ்பர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நாளைய மின் தடை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
தூத்துக்குடி இனிகோ நகர், ரோச் காலனி, சகாயபுரம், மினிசகாயபுரம், மாதா தோட்டம், கடல்சார் மீன்வள ஆராச்சி நிலையம், தெற்கு கடற்கரை சாலை, உப்பள பகுதிகள், லயன்ஸ் டவுன், தெற்கு காட்டன் சாலை, ஸ்னோஸ் காலனி, செயின் பீட்டர் கோயில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, பெரியக்கடை தெரு, ஜார்ஜ் சாலை, கணேசபுரம், பாத்திமா நகர், இந்திரா நகர், புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகர், பனிமய நகர், தாமோதர நகர், வண்ணார் தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் சாலை, சண்முகபுரம், பிராப்பர் தெரு, சந்தை சாலை, காந்திநகர், முனியசாமிபுரம். சிஜிஇ காலனி, லோகியா நகர், மேலசண்முகபுரம், 2வதுதெரு, ராஜபாண்டி நகர், பெரியசாமி நகர், எம்ஜிஆர் நகர், முடுக்குக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
The post பிரையண்ட் நகர் பிரதான சாலைகள் விரிவாக்க பணி மேயர் ஜெகன்பெரியசாமி ஆய்வு appeared first on Dinakaran.