பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஸ்வேரெவ் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

1 day ago 4

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அலெக்சாண்டர் ஸ்வேரெவ் (ஜெர்மனி), இத்தாலியின் பிளாவியோ கோபோலி உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வேரெவ் 6-2, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் பிளாவியோ கோபோலியை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வேரெவ், நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோத உள்ளார். 

Read Entire Article