'பிரிக்ஸ்' மாநாடு மன்மோகன்சிங் யோசனையை நினைவுகூர்ந்த காங்கிரஸ்

5 hours ago 2

புதுடெல்லி,-

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கானா, டிரினாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா ஆகிய நாடுகளை தொடர்ந்து, பிரதமர் மோடி பிரேசில் சென்றுள்ளார். 17-வது 'பிரிக்ஸ்' மாநாடு, ரியோ டி ஜெனிரோவில் தொடங்கி உள்ளது. இந்த நேரத்தில், கடந்த 2012-ம் ஆண்டு, முதல்முறையாக இந்தியா நடத்திய 'பிரிக்ஸ்' மாநாட்டை நினைவுகூர்கிறேன். அப்போது டெல்லியில் நடந்த அம்மாநாட்டில், 'பிரிக்ஸ்' வளர்ச்சி வங்கி அமைக்க அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் யோசனை தெரிவித்தார். 3 ஆண்டுகளுக்கு பிறகு, புதிய வளர்ச்சி வங்கியாக அது தொடங்கப்பட இருந்தது. பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக இந்தியா இதுவரை 800 கோடி டாலர் கடன் வாங்கி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read Entire Article