![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39079255-sghg.webp)
பாரிஸ்,
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். பாரிசில் நேற்று தொடங்கிய சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு பிரதமர் மோடி கலந்துகொண்டார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து, பிரான்சின் மெர்சிலி நகருக்கு அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சென்றார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் சேர்ந்து பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
முன்னதாக, மெர்சிலி நகரில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து இரு தலைவர்களும், மெர்சிலி நகரில் வசித்துவரும் இந்திய வம்சாவளியினரிடம் கலந்துரையாடினர்.
பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்திக்க உள்ளார்.