அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

3 hours ago 1

பாரிஸ்,

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 10ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி நேற்று தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி தற்போது அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். பிரான்சின் மெர்சிலி நகரில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். விமான நிலையம் சென்ற பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தார். வாஷிங்டன் செல்லும் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்திக்கிறார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றபின் முதல் முறையாக அவரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு இருநாடுகளுக்கு மட்டுமின்றி உலக அளவிலும் கவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article