பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைகளுக்கு அருகே உள்ள நகரின் சந்தை பகுதியில் கத்திக்குத்து தாக்குதல் நடந்தது. இதில், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த முதியவர் உயிரிழந்தார்.மேலும், 3 பேர் காயமடைந்தனர். கடவுளே சிறந்தவன் என அரபு மொழியில் சத்தம் போட்டபடியே வந்த 37 வயதான அல்ஜீரிய வாலிபர் தன்னிடம் இருந்த கத்தியால் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டார். விரைந்து வந்த போலீசார் அவனை கைது செய்தனர். இது தீவிரவாத தாக்குதல் ஆகும் என பிரான்ஸ் உள்துறை பாதுகாப்பு அமைச்சர் புருனோ ரீடெய்லியு தெரிவித்தார்.
The post பிரான்சில் தீவிரவாத தாக்குதலில் ஒருவர் பலி appeared first on Dinakaran.