
பிராக்,
பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, தனது முதல் 2 ஆட்டங்களிலும் டிரா கண்டிருந்தார்.
இதனையடுத்து பிரக்ஞானந்தா தனது 3-வது ஆட்டத்தில் இன்று செக்குடியரசின் தாய் டாய் வான் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா எளிதில் வெற்றி பெற்று நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.