சாம்பியன்ஸ் டிராபி: நெட் பவுலருக்கு பரிசு வழங்கிய இந்திய வீரர் - விவரம்

3 hours ago 1

துபாய்,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில் குரூப் - ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன.

இந்த தொடரில் இந்திய அணி தனது ஆட்டங்களை துபாயில் மட்டும் விளையாடி வருகிறது. இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை நியூசிலாந்தை சந்திக்கிறது. இதன் காரணமாக இந்திய வீரர்கள் அனைவரும் துபாயில் உள்ள ஐ.சி.சி அகாடமி மைதானத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் வலைப்பயிற்சியின் போது உதவிய நெட் பவுலருக்கு அன்பு பரிசு வழங்கிய தகவல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் யு.ஏ.இ அணிக்காக விளையாடும் ஜஸ்கிரன் சிங் தற்போது துபாயில் பயிற்சி பெற்று வரும் அணிகளுக்கு நெட் பவுலராக பந்துவீசி உதவி வருகிறார். ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகளுக்கு வலைப்பயிற்சியின் போது உதவிய அவர் இந்திய அணி பயிற்சியில் பங்கேற்றபோதும் நெட் பவுலராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு ஸ்ரேயாஸ் ஐயர் ஷூ ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். இது குறித்து ஜஸ்கிரன் சிங் கூறியதாவது, ஏற்கனவே நான் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகளுக்கு பயிற்சியின்போது பந்து வீசியிருந்தேன். ஆனால், இந்திய அணியில் அதிகமாக சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் என்னால் இந்திய வீரர்களுக்கு பந்துவீச முடியாமல் போனது.

இருப்பினும் பயிற்சியின்போது அவர்களுடன் இருந்தேன். அப்போது லாங் ஆப் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது ஸ்ரேயாஸ் ஐயர் என்னிடம் வந்து எப்படி இருக்கிறாய்? என்று கேட்டதோடு ஷூ சைஸ் என்ன? என்று கேட்டார். அதற்கு நான் 10 என்று கூறியதும் உடனடியாக எனக்கு ஒரு புதிய ஷூ ஒன்றை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தினார்.

உண்மையிலேயே இந்த நாளை அவர் மிகச் சிறப்பான நாளாக மாற்றி இருக்கிறார். இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனான அவர் இப்படி ஒரு பரிசை வழங்கியது என்னால் மறக்க முடியாத ஒன்று. இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article