சாம்பியன்ஸ் டிராபி: துபாய்க்கு புறப்படும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா.. காரணம் என்ன..?

3 hours ago 2

துபாய்,

8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும், முதலாவது அரைஇறுதியும் துபாயில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் பங்கேற்றுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இன்று இரவு பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலாவது அரைஇறுதி ஆட்டம் துபாயில் நடைபெற உள்ளதால் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப பயிற்சி மேற்கொள்ளும் பொருட்டு இரு அணிகளும் முன் கூட்டியே துபாய் புறப்பட உள்ளன.

இதில் இந்திய அணி உடன் முதல் அரைஇறுதி ஆட்டத்தில் மோதப்போகும் அணி போட்டி முடியும் வரை துபாயில் இருக்கும் என்றும் மற்றொரு அணி நாளை கடைசி லீக் ஆட்டம் முடிந்தவுடன் பாகிஸ்தான் புறப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடி வருவதால் இவ்விரு அணிகளும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Read Entire Article