பிரமாண்ட பேரணி: முதல்-அமைச்சருக்கு, கவர்னர் நன்றி

19 hours ago 4

சென்னை,

கவர்னர் ஆர்.என்.ரவி, கவர்னர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தானின் ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும், வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான மக்கள் பேரணியை நடத்தியதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகள்.

நமது ஆயுதப் படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Read Entire Article