தோனி எந்த அணியில் விளையாடினாலும் அந்த அணி எனக்கு பிடிக்கும் - மீனாட்சி சவுத்ரி

1 day ago 3

சென்னை,

தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பல படங்களில் இவர் நடித்திருந்தார். அதன்படி, "சிங்கப்பூர் சலூன், தி கோட் , லக்கி பாஸ்கர் , மட்கா" ஆகிய படங்களில் நடித்து பாராட்டை பெற்றார். சமீபத்தில் வெங்கடேஷுடன் 'சங்கராந்திகி வஸ்துன்னம் 'படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து, தற்போது மீனாட்சி சவுத்ரி 'அனகனக ஓக ராஜு' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மாரி இயக்குகிறார். இப்படத்தில் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை மீனாட்சி சவுத்ரி பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். அதாவது, 'ஸ்த்ரீ, மிமீ' போன்ற ஹிட் படங்களை தயாரித்த தினேஷ் விஜய் தயாரிக்கும் புதிய படத்தில் மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் அவருக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரமாம். தமிழ், தெலுங்கு சினிமாவை தாண்டி மீனாட்சி சவுத்ரி பாலிவுட் சினிமாவில் நுழைய இருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மீனாட்சி சவுத்ரி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது உங்களுக்குப் பிடித்த ஐபிஎல் அணி எது என்று கேட்கப்பட்டிருக்கிறது.அதற்குப் பதிலளித்த அவர், " ஐபிஎல்லில் குறிப்பிட்டு இந்த அணியைத்தான் பிடிக்கும் என்பதெல்லாம் இல்லை. ஆனால் தோனி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். தோனி எந்த அணியில் விளையாடினாலும் அந்த அணி எனக்கு பிடிக்கும். தோனியைப் பிடிக்க ஆரம்பித்ததால் தான் நான் கிரிக்கெட்டைப் பார்க்கத் தொடங்கினேன்" என்று கூறியிருக்கிறார்.

Read Entire Article