பிரான்ஸ்: பிரதமர் மோடி 2 நாடுகள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளார். பிரான்சில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்று பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்களை சந்தித்து பேசினார். அந்த வகையில், பாரிசில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடியை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார்.
அப்போது, செயற்கை நுண்ணறிவு (AI) இந்தியாவிற்கு கொண்டு வரும் ”நம்பமுடியாத வாய்ப்புகள்’ மற்றும் நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தை முன்னேற்றுவதற்காக கூகுள், இந்தியா இடையே நெருக்கமான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை குறிப்பிட்டார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘AI உச்சி மாநாட்டிற்காக பாரிசில் இன்று பிரதமர் மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி. AI இந்தியாவிற்கு கொண்டு வரும் நம்பமுடியாத வாய்ப்புகள் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் நாம் நெருக்கமாக இணைந்து பணியாற்றக்கூடிய வழிகள் குறித்து விவாதித்தோம்” என்றார்.
The post பிரதமர் மோடியை சந்தித்து பேசிய சுந்தர் பிச்சை appeared first on Dinakaran.