
பிரேசிலியா,
பிரதமர் மோடி கடந்த 2-ந் தேதி முதல் 5 நாடுகள் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில் கானா மற்றும் டிரினிடாட் டொபாகா நாடுகளில் பயணத்தை முடித்துக்கொண்ட அவர், பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு சென்றார். இதற்கு முன் 3 முறை பிரேசில் சென்றுள்ளார். முதலாவதாக ஜூலை 2014ம் ஆண்டில் சென்றார். அதைத் தொடர்ந்து 2019ல் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மற்றொரு பயணம், கடந்த ஆண்டு நவம்பரில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு என 3 முறை சென்றுள்ளார்.
இந்நிலையில் தற்போது ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மீண்டும் பிரேசில் சென்றார். மாநாட்டுக்கு பிறகு, பிரதமர் மோடி, பிரேசிலியா நகரில் உள்ள அல்வோராடா மாளிகைக்கு சென்றார்.
அப்போது பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில் அதிபர் லுாலா டி சில்வா அரண்மனை வாசலில் வந்து நின்று பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தார். இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
முன்னதாக, ரியோ பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது சிலி அதிபர் கேப்ரியல் போரிக் போண்டை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா-சிலி நட்புறவு மேலும் மேலும் வலுவடைந்து வருகிறது என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.