பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம்

3 hours ago 3

டெல்லி,

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கை செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக, பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரியா உள்ளிட்டோரை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

இந்த பயணத்தின்போது இந்திய நிதி உதவியுடன் திரிகோணமலை மாவட்டம் சம்பூரில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 2015ம் ஆண்டு முதல் இலங்கைக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 4வது பயணம் இதுவாகும். 

Read Entire Article