பிப்ரவரி 1ம்தேதி முதல் 14ம்தேதி வரை கோழி வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி

1 week ago 2

கரூர், ஜன. 31:கோழி வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி வரும் பிப்ரவரி 1ம்தேதி முதல் 14ம்தேதி வரை போடப்படுவதாக கலெ க்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கோழி வெள்ளைக் கழிச்சல் நோய் என்பது ஒரு வகை நச்சு உயிரினால் ஏற்படும் தொற்று நோயாகும். இந்த நோய் தீவனம், குடிநீர், காற்று மூலம் பரவும் தன்மை கொண்டது. இந்த நோய் கண்ட கோழிகள் வெள்ளையாகவும், பச்சையாகவும் கழிச்சல காணப்படும். மேலும், மூச்சுத்திணறல், நடுக்கம், வாதம், சோர்வு மற்றும் தீவனம் உட்கொள்ளும் அளவு குறைந்து காணப்படும். இந்த நோய் தாக்கிய கோழிகளில் இறப்பு அதிகமாக இருக்கும். கோழிக்குஞ்சுகளுக்கு 2 மாத வயதில் வெள்ளை கழிச்சல் தடுப்பூசி அளிப்பதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்.

இந்த நோயை கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் கால்நடை பராமரிப்புத்துறையால் இருவார விழா நடத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்திற்கு என 2.15லட்சம் டோஸ்கள் வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி பெறப்பட்டு அனைத்து கால்நடை நிலையங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இதற்காக பிப்ரவரி 1ம்தேதி முதல் 14ம்தேதி வரை கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை பெருமருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை கிளை நிலைய பகுதிகளில் இலவசமாக கோழி வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்படவுள்ளன. இந்த தடுப்பூசியை 2 மாத வயது முடிவடைந்த கோழிக்குஞ்சுகள் முதல் கோழிகளுக்கும் போடலாம்.எனவே விவசாயிகள் மற்றும் கோழி வள ர்ப்போர் அனைவரும இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோழி வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசியை இலவசமாக தங்கள் கோழிகளுக்கு போட்டுக் கொண்டு கோழிகளை இறப்பில் இருந்தும், பொருளாதார இழப்பில் இருந்தும் பாதுகாத்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post பிப்ரவரி 1ம்தேதி முதல் 14ம்தேதி வரை கோழி வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி appeared first on Dinakaran.

Read Entire Article