புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜ, ஆம் ஆத்மி கட்சிகள் ஏற்கனவே பல்வேறு இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வௌியிட்டு விட்டன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் நேற்று வௌியிட்டார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், “டெல்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 உதவித்தொகை, 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.500க்கு எரிவாயு சிலிண்டர், ரூ.25 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
“படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு வருடத்துக்கு மாதம்தோறும் ரூ.8,500 உதவித்தொகை அளிக்கப்படும், இலவச ரேஷன் தொகுப்பு வழங்கப்படும், நகரம் முழுவதும் ரூ.5க்கு உணவு வழங்கும் விதமாக 100 இந்திரா கேண்டீன்கள் தொடங்கப்படும்” என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், “டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், பூர்வாஞ்சல் பழங்குடி மக்களுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படும்” எனவும் காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது.
The post பிப்.5 பேரவை தேர்தல்; டெல்லியில் காங். ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ2,500: ரூ500க்கு எல்பிஜி சிலிண்டர்: காங்கிரஸ் வாக்குறுதி appeared first on Dinakaran.