பூந்தமல்லி, பிப்.1: சென்னை அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த அந்தோணி (30) என்பவர், நேற்று முன்தினம் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (70) என்பவர், எங்கள் குடும்பத்துக்கு நன்கு அறிமுகமானவர். இவர், சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் டிரைவர் வேலை வாங்கி தருவதாக என்னிடம் கூறினார். அதை நம்பி, அவரிடம் ₹4.20 லட்சம் கொடுத்தேன். ஆனால், நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கி தராமல் அலைக்கழித்து வருகிறார். அதனால், நான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால், கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பன்னீர்செல்வம் வேலை வாங்கி கொடுக்காமல் பணம் வாங்கி கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.
The post அரசு வேலை வாங்கி தருவதாக ₹4.20 லட்சம் மோசடி appeared first on Dinakaran.