பிச்சம்பட்டி பகுதியை ஒட்டி சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்

4 weeks ago 5

 

கரூர், டிச. 17: பிச்சம்பட்டி பகுதியை ஒட்டி சாலையோரத்தில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று நாதக கட்சியினர் கலெக்டரிடம்அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், கரூர் மாவட்டம் பிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:பிச்சம்பட்டி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட 100 நாள் வேலை உறுதி திட்ட அட்டைகள் உள்ளன.

இவர்களுக்கு ஆண்டுககு 100 நாள் வேலை தர வேண்டும். ஆனால், ஆண்டுக்கு குறைந்த அளவு நாட்கள்தான் வேலை வழங்கப்படுகிறது. எனவே, இவர்களுக்கு அதிக நாட்கள் வேலை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதே போல், இந்த பகுதியை சுற்றிலும் ஏரா ளமான கிரானைட் நிறுவனங்கள் உள்ளன,

எனவே, இதுபோன்ற நிறுவனங்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அதிகளவு மரக்கன்றுகளை நட தேவையான ஏறபாடுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பழைய ஜெய ங்கொண்டம் பகுதியில் கட்டப்பட்டுள்ள சுகாதார கழிப்பறையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பிச்சம்பட்டி பகுதியை ஒட்டி சாலையோரத்தில் அதிகளவு முட்புதர்கள் வளர்ந்துள்ளன. இதனை முற்றிலும் அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுக்களில் தெரிவித்துள்ளனர்.

The post பிச்சம்பட்டி பகுதியை ஒட்டி சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article