பிக் பாஷ் லீக்; கூப்பர் கனோலி அரைசதம்... மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்திய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்

4 months ago 16

பெர்த்,

இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் தொடர் போல ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், பிக் பாஷ் லீக் தொடரின் 14வது சீசன் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ், டாக் கர்ரன் ஆகியோர் தலா 37 ரன்கள் எடுத்தனர்.

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 147 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 17.1 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 150 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் தரப்பில் அபாரமாக ஆடிய கூப்பர் கனோலி அரைசதம் (64 ரன்) அடித்து அசத்தினார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் தரப்பில் ஆடம் மில்னே, பீட்டர் சிடில், டாம் கர்ரன், பிராடி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Read Entire Article