பெண் விங் கமாண்டர் குறித்து சமாஜ்வாடி தலைவர் சர்ச்சை கருத்து - மாயாவதி கண்டனம்

3 hours ago 2

லக்னோ,

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரின் வீரம் குறித்து நாடு முழுவதும் ஒன்றுபட்டு பெருமை கொள்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மதம் மற்றும் சாதி அடிப்படையில் ராணுவத்தை மதிப்பிடுவது/பிரிப்பது மிகவும் நியாயமற்றது. இந்த விஷயத்தில் பா.ஜ.க. மந்திரி செய்த அதே தவறை, மூத்த சமாஜ்வாடி தலைவரும் இன்று செய்துள்ளார், இது வெட்கக்கேடானது மற்றும் கண்டிக்கத்தக்கது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம் கோபால் யாதவ், 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து செய்தி ஊடகங்களுக்கு விளக்கம் அளித்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் குறித்து சாதி அடிப்படையிலான சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 

Read Entire Article