பிக் பாஷ் லீக்: 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சிட்னி தண்டர்

5 hours ago 1

சிட்னி,

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரின் 14-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் (சேலஞ்சர் ஆட்டம்) சிட்னி தண்டர் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சில்க் 43 ரன்கள் அடித்தார். தண்டர் தரப்பில் வெஸ் அகர் மற்றும் டாம் ஆண்ட்ரூஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி தண்டர் அணி 18.5 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சாம் பில்லிங்ஸ் 42 ரன்கள் அடித்தார். சிக்சர்ஸ் தரப்பில் ஹெய்டன் கெர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சாம் பில்லிங்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் சிட்னி தண்டர் 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் - சிட்னி தண்டர் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Read Entire Article