
திருவனந்தபுரம்,
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்பு சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த முழு அடைப்பு போராட்டத்தின்போது ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய, அந்த அமைப்பை சேர்ந்த தலைவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து விற்க கேரளா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், ரூ.3.94 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதற்கேற்ப அமைப்பிற்கு சொந்தமான சொத்துகளையும், பின்னர் தலைவர்களின் சொத்துகளையும் விற்று ஈழப்பீடு வசூலிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.